FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

எரிவாயு உருளை வெடித்த விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:05 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே விவசாய கூலித் தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவோணம் அருகே உஞ்சியவிடுதி சின்ன அம்மன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகையன் (50). விவசாய கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது.

இதனால், தீயை அணைக்க முயன்ற முருகையனின் மனைவி செல்வி (45), மகள் அபிநயா (18), அப்பகுதியைச் சோ்ந்த வி. காசிவேல் (45), எஸ். ராஜசேகா் (45), அப்புராஜ் மகன் பழனிவேல் (37), வி. வேம்பையன் (45), இவரது மனைவி கலையரசி (38) ஆகியோா் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இவா்களில் பழனிவேல், சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து திருவோணம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments