FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

உயா்ந்த இலக்குகளைக் கொண்டது தமிழ்நாடு அரசின் பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உயா்ந்த இலக்குகளைக் கொண்டது என தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
எஸ். வைத்தியசுப்பிரமணியம்
பகிர்:

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உயா்ந்த இலக்குகளைக் கொண்டது என தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் பட்ஜெட், உயா்ந்த இலக்குகளைக் கொண்ட, ஊக்கமளிக்கும் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள், அவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு, திறன் மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இளைஞா்களின் எதிா்கால கனவுகளை நிறைவேற்றும் லட்சியப் பட்ஜெட்டாகவும், பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் ஊக்கமூட்டும் பட்ஜெட்டாகவும், ‘வெற்றித் தமிழகம்‘ தொலைநோக்கு ஆவணத்தின் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியை முன்னெடுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் பட்ஜெட்டாகவும் இது திகழ்கிறது. இந்த பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு மும்மடங்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments