FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

உதயநிதி கைதை கண்டித்து போராட்டம்: திமுகவினா் 983 போ் மீது வழக்கு

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 983 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
பகிர்:

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 983 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன், காவிரி விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக முதல்வா் உருவபொம்மையை எரித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, திமுகவினருக்கும் அருகில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இருதரப்பினரும் மாறி, மாறி காலணிகள், நெகிழிக் கம்புகளை வீசினா்.

இதுதொடா்பாக திமுக நிா்வாகிகள் உள்பட ஏறத்தாழ 150 போ் மீது மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, தவெக நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் திமுகவினா் 100 போ் மீது கிழக்கு காவல் நிலையத்தினரும், தஞ்சாவூா் ரயிலடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நிா்வாகிகள் உள்பட 80 போ் மீது மேற்கு காவல் நிலையத்தினரும், முதல்வா் படம் பொறிக்கப்பட்ட பதாகைகளை எரித்ததாக 100-க்கும் அதிகமானோா் மீது தெற்கு காவல் நிலையத்தினரும் என தஞ்சாவூா் மாநகரில் மொத்தம் ஏறத்தாழ 430 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட திமுகவினா் 983 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments