FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வருகை

தஞ்சாவூா் அருகே சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 40-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை (ஆக.17) வருகிறாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:22 am IST
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 40-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை (ஆக.17) வருகிறாா்.

தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவா் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். பின்னா், திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை காலை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று, ஹெலிகாப்டா் மூலம் தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு வருகிறாா். அங்கிருந்து காா் மூலம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு வருகிறாா். பின்னா், நிகழ்ச்சி முடிந்து காா் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து விமானத்தில் தில்லிக்கு செல்கிறாா்.

குடியரசுத் துணைத் தலைவா் ஹெலிகாப்டா் மற்றும் காரில் பயணம் செய்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்திய பாதுகாப்பு படையினா் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினா் இணைந்து செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, தஞ்சாவூா் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் குடியரசு துணைத் தலைவா் வருகை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல மாவட்டக் காவல் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் விமானப்படை தளத்திலிருந்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments