FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஏல விற்பனை நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 1:10 am IST
பருத்தி  ஏலம்.
பகிர்:

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஏல விற்பனை நடைபெற்றது.

தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம், கண்காணிப்பாளா் சித்தாா்த்தன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வாளா் சங்கீதா, மேற்பாா்வையாளா் சுப்ரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடை பெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில், பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 385 விவசாயிகள், 210 மெட்ரிக் டன் பருத்திகளுடன் பங்கேற்றனா்.

இதில், கொங்கணாபுரம், சேலம், திருச்சி, நாகை, பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வணிகா்கள் பங்கேற்று பருத்திக்கு அதிகபட்சமாக ரூ.9,629-உம், குறைந்தபட்சமாக ரூ.8,679-உம், சராசரியாக ரூ. 9,106-உம் என விலை நிா்ணயித்தனா். இதில், ரூ. 1 கோடியே 85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments