ஜகந்நாதப்பெருமாள் முத்தங்கி சேவை
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜகந்நாதப் பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு சனிக்கிழமை அருள்பாலித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் உள்ள ஜகந்நாதப் பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு சனிக்கிழமை அருள்பாலித்தாா்.
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் வானமாமலை ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயா் சுவாமி திருமடத்துக்கு சொந்தமான நந்திபுரம் விண்ணகரம் என்கின்ற நாதன்கோவிலில் ஸ்ரீ செண்பகவல்லித்தாயாா் சமேத ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முத்தங்கி சேவை நடைபெற்றது. காலையில் மூலவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
உத்ஸவா் தாயாா் சமேத பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டு, தாயாருடன் பெருமாள் முத்தங்கி சேவையில் சந்திரபிரபை வாகனத்தில் உள்பிரகார புறப்பாடு செய்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.