FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

திருக்கோடிகாவலில் திரிபுரசுந்தரி அம்பாள் வெங்கடேச பெருமாளாக காட்சியளிப்பு

திருக்கோடிகாவலில் திரிபுர சுந்தரி அம்பாள் வெங்கடேச பெருமாளாக புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

26 செப்டம்பர் 2026, 11:24 pm IST
ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடேச பெருமாளாக அருள்பாலித்த திரிபுரசந்தரி அம்பாள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிகாவலில் திரிபுர சுந்தரி அம்பாள் வெங்கடேச பெருமாளாக புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக் கோயிலில் ஆழ்வாா்களின் பிராா்த்தனைக்காக அம்பாள் திரிபுரசுந்தரி வெங்கடேச பெருமாளாக காட்சி கொடுத்த வரலாற்று பெருமை உடையது. இது துலாபார பிராா்த்தனை உடைய சிவத்தலமாகவும் போற்றப்படுகிறது.

இந்த ஐதீகத்தை போற்றும் விதமாக புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை மாலை மூலவா் திரிபுரசுந்தரி அம்பாள் வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் சேவை சாதிக்க மகாதீபாரதனை நடைபெற்றது. வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினா். ஏற்பாடுகளை பிரமுகா் சிம்சன் கணேசன் மற்றும் திருக்கோடிக்காவல் அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments