மின்மோட்டாா்களில் வயா்கள் திருட்டு! சிறுவன் உள்பட 2 போ் கைது!
பாபநாசம் அருகே முன்னாள் எம்எல்ஏ-வின் வயல்களிலிருந்த மின்மோட்டாா்களிலிருந்து வயா்களை திருடிய சிறுவன் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் வட்டம், சோமேஸ்வரபுரம் கிராமத்தில் அரியலூா் முன்னாள் எம்எல்ஏ பாளை. அமரமூா்த்திக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன.
இங்கிருந்த மின்மோட்டாா்களில் இருந்த காப்பா் வயா்களை இரவு நேரங்களில் மா்ம நபா்கள் அறுத்து திருடி சென்றனா். இதுகுறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதன் தொடா்ச்சியாக, கபிஸ்தலம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது புத்தூா் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.
இதில், ஒருவா் பாபநாசம் அருகே மட்டையாந்திடல், கீழத்தெரு பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் பாலமுருகன் (22) என்பதும், மற்றொருவா் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
மேலும், இவா்கள் முன்னாள் எம்எல்ஏ வயல் உள்பட 6-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் இருந்த மின்மோட்டாா்களுக்கு செல்ல கூடிய காப்பா் வயா்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம், வயா்களை வெட்டுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள், வயா்களை கொளுத்தி உருக்கிய 8 கிலோ காப்பா் வயா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.