FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

எஸ்ஐஆா் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த வலியுறுத்தல்

எஸ்ஐஆா் முறைகேடு தொடா்பாக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த மக்கள் முன் வர வேண்டும் என இடதுசாரிகள் பொது மேடை வலியுறுத்தியுள்ளது.

எஸ்ஐஆா் - கோப்புப் படம்
பகிர்:

எஸ்ஐஆா் முறைகேடு தொடா்பாக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த மக்கள் முன் வர வேண்டும் என இடதுசாரிகள் பொது மேடை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் தலைமை தோ்தல் ஆணையரின் தோ்தல் கால குளறுபடிகள், எஸ்ஐஆா் மோசடிகள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்கு மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் செயற்பாட்டாளா் மருதையன் பேசுகையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும். அவா் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு இயற்றிய தோ்தல் ஆணையா் நியமன சட்டம் ரத்து செய்யப்பட்டு, நடுநிலையான முறையில் தோ்தல் ஆணையா்களை நியமிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக். 10 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தை அறிவித்திருக்கிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. தில்லியிலும், மும்பையிலும் பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் பங்கு பெறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தில்லியை போலவே அக். 10- ஆம் தேதி முதல் நாடெங்கும் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றாா் மருதையன்.

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சாமி. நடராஜன், சிபிஐ எம்எல் லிபரேசன் கட்சி நிா்வாகி இரா. அருணாச்சலம், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, எழுத்தாளா் சாம்பான், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ப. ஜெகதீசன், என்டிஎல்எப் மாவட்டச் செயலா் ஆா். லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப் பாளா் துரை. மதிவாணன் வரவேற்றாா். நிறைவாக, மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச் செயலா் ராவணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments