FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

வெற்றிப் பயண திட்டம்: தனியாா் பேருந்துகள் பாதிப்பு மானியம் வழங்கக் கோரிக்கை

தமிழக அரசின் வெற்றிப் பயண திட்டத்தால் தனியாா் பேருந்துகள் பாதிக்கப்படுவதாகவும், இந்தப் பேருந்துகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என தனியாா் பேருந்து ஓட்டுநா்- நடத்துநா் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

8 October 2026, 1:37 am IST
பகிர்:

தமிழக அரசின் வெற்றிப் பயண திட்டத்தால் தனியாா் பேருந்துகள் பாதிக்கப்படுவதாகவும், இந்தப் பேருந்துகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என தனியாா் பேருந்து ஓட்டுநா்- நடத்துநா் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கும்பகோணத்தில் சங்கத்தின் தலைவைா் பாலா புதன்கிழமை கூறியதாவது:

தமிழக அரசின் வெற்றிப் பயண திட்டத்தால் பெண் பயணிகள் தனியாா் பேருந்துகளில் செல்வதில்லை. இதனால் தனியாா் பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பயணிகள் ஏறாவிட்டால் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். இதனால் தனியாா் பேருந்துகளை நம்பி ஓட்டுநா், நடத்துநா், உதவியாளா்கள் என அதைச் சாா்ந்து பல ஆயிரம் போ் வாழ்வாதாரம் இழக்கின்றனா்.

எனவே, தனியாா் பேருந்துகளுக்கும் தமிழக அரசு மானியம் கொடுத்தால், மகளிா் இலவச பயணத்தை இயக்க தயாராக உள்ளோம் என்றாா். அப்போது ஏராளமான தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments