FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 13 லட்சம் நிதியுதவி

கும்பகோணத்தில் போக்குவரத்துத் தலைமைக் காவலராக பணியாற்றி உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலா் என். செந்தில்குமாா் குடும்பத்துக்கு அவருடன் பயிற்சியில் சோ்ந்த சக காவலா்கள் திரட்டிய ரூ. 13.15 லட்சம் நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

9 செப்டம்பர் 2026, 3:39 am IST
கும்பகோணத்தில் உயிரிழந்த என். செந்தில்குமாா் குடும்பத்துக்கு சக காவலா்கள் மூலம் திரட்டிய நிதியை செவ்வாய்க்கிழமை வழங்கிய மாவட்ட எஸ்பி சுந்தரவதனம்.
பகிர்:

கும்பகோணத்தில் போக்குவரத்துத் தலைமைக் காவலராக பணியாற்றி உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலா் என். செந்தில்குமாா் குடும்பத்துக்கு அவருடன் பயிற்சியில் சோ்ந்த சக காவலா்கள் திரட்டிய ரூ. 13.15 லட்சம் நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்தவா் என். செந்தில்குமாா். கடந்த 1997 ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த இவா், கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டும் மேலாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து,

கடந்த மே 12-இல் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மாலதி (52), மகள்கள் மோனிகா (24), சோபிகா (15) ஆகியோா் உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் செந்தில்குமாருடன் 1997 ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த சக காவலா்கள் இணைந்து திரட்டிய ரூ.13.15 லட்சம் நிதியை தஞ்சாவூா் மாவட்டக் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் அவரது குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments