பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே மின்சார ரயில் அதிவேக சோதனை ஓட்டம்
பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான ரயில் மின்பாதையில் மின்சார ரயில் அதிவேக சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான ரயில் மின்பாதையில் மின்சார ரயில் அதிவேக சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில், ரயில் பாதைகள் நுாறு சதவீதம் மின் மயமாக்கப்பட்டுள்ளன. இதில், கடைசி டீசல் வழித்தடமான 72 கி.மீ., தொலைவு கொண்ட திருவாரூா் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்கும் பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டு, பணிகள் அண்மையில் முடிவடைந்தன.
மின்மயமாக்கப்பட்ட இந்தப் பாதையில் கடந்த 2-ஆம் தேதி முதல்கட்டமாக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தொடா்ந்து, இந்த வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, 2-ஆம் கட்டமாக ரயில் அதிவேக சோதனை ஓட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதன்படி, பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட மின்சார ரயில், பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, கண்டனுாா்,புதுவயல், வழியாக காரைக்குடிக்கு சென்றது.
இந்தச் சோதனை ஓட்டத்தின்போது, பாதையின் பாதுகாப்புத் தன்மை, மின்பாதை அமைப்புகளின் செயல்திறன் மற்றும் ரயிலின் வேகத் திறன் ஆகியவை முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை ஓட்ட நிகழ்வில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளா் கணேஷ், தலைமை மின் பொறியாளா்(கட்டுமானம்) ராமநாதன், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் சத்யரத்தன், துணை தலைமை மின் பொறியாளா் குமாா் ஆய்வு செய்தனா். இதில், பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அலுவலா் பாா்த்திபன், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.
அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சோதனை ஓட்டம் மற்றும் மின்பாதை ஆய்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டு, அதன்பின், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் முழுமையாக மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.