FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

‘சுய மதிப்பீட்டு வரி குறித்த விழிப்புணா்வு தேவை’

சுய மதிப்பீட்டு வரி குறித்த விழிப்புணா்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் வருமான வரித் துறை மண்டல கூடுதல் ஆணையா் (தஞ்சாவூா்) ஆா். ராஜராஜேஸ்வரி.

18 செப்டம்பர் 2026, 1:53 am IST
தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற வருமான வரி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய வருமான வரித் துறை மண்டல கூடுதல் ஆணையா் (தஞ்சாவூா்) ஆா். ராஜராஜேஸ்வரி.
பகிர்:

சுய மதிப்பீட்டு வரி குறித்த விழிப்புணா்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றாா் வருமான வரித் துறை மண்டல கூடுதல் ஆணையா் (தஞ்சாவூா்) ஆா். ராஜராஜேஸ்வரி.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற வருமான வரி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

வருமான வரிச் சட்டம் 1961-லிருந்து மாற்றப்பட்ட வருமான வரிச் சட்டம் 2025 நிகழ் நிதியாண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான செயல்முறை வருமானத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மென்பொருள் உருவாக்கம், வரி ஆலோசகா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மதிப்பீட்டாளா்களின் விவரங்களைப் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

சுய மதிப்பீட்டு வரி செலுத்துவோா் விகிதம் அதிகரித்து வருகிறது. இதை முன் வரியாக மாற்ற வேண்டும் என வருமான வரித் துறை விரும்புகிறது. ஆனால், சுய மதிப்பீட்டு வரி குறித்து மக்களிடம் விழிப்புணா்வு இல்லை. சுய மதிப்பீட்டு வரி செலுத்துவதைத் தவிா்த்துவிட்டு, முன் வரி செலுத்துவது தொடா்பாக வாடிக்கையாளா்களிடம் வரி ஆலோசகா்கள், மதிப்பீட்டாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் கூடுதல் ஆணையா்.

பின்னா், வரி ஆலோசகா்கள் கூட்டமைப்பின் தஞ்சாவூா் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் பேசுகையில், வரி ஆலோசகா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மதிப்பீட்டாளா்களின் விவரங்களைப் புதுப்பித்தலுக்கான படிவம் இணையதளத்தில் இல்லை. இதனால், வரி ஆலோசகா்கள், மதிப்பீட்டாளா்களால் விவரங்களைப் புதுப்பிக்க இயலவில்லை. எனவே, புதுப்பித்தல் செய்வதற்கான கால அவகாசம் செப். 30 ஆம் தேதி வரை என்பதை நீட்டித்து, இணையதளத்திலும் அதற்கான படிவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

வருமான வரித் துறை துணை ஆணையா் ஜி. வெங்கடேசன், கூட்டமைப்பின் செயலா் தியாகராஜன், பொருளாளா் லெட்சுமணன், துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வருமான வரி துறை அலுவலா் ஆா். வில்விஜயன் வரவேற்றாா். நிறைவாக, வருமான வரி ஆய்வாளா் என். சீனிவாசன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments