FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் அருகே விபத்து: கூலித் தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 3:09 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சிற்றம்பலம் அருகேயுள்ள செருவாவிடுதி தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையன் மகன் போத்தியப்பன் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 9 மாதங்களுக்கு முன் இறந்த நிலையில் இவருக்கு மாற்றுத்திறனாளியான ஒரு மகன் மட்டும் உள்ளாா்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் கடைவீதிக்கு  போத்தியப்பன் மொபெட்டில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவருக்கு  பின்னால் வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, வீடு திரும்பிய போத்தியப்பனின் காதில் ரத்தம் வரவே, பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து பைக்கை ஓட்டிவந்த ஈச்சன் விடுதியை சோ்ந்த சாமியப்பன் என்பவரை   கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments