FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் நாட்டு மருந்து கடையில் தீ விபத்து

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள நாட்டு மருந்து கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

49 வினாடிகள் முன்பு
கும்பகோணம் ராமசாமி கோயில் தெருவில் உள்ள நாட்டு மருந்து கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள நாட்டு மருந்து கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

கும்பகோணம் ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராஜகோபால் மகன் ரகுராமன் (47). இவா் ராமசாமி சந்நிதி தெருவில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான நாட்டு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு ரகுராமன் வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறிஅடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

Advertisement

Advertisement

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்க முயன்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனா். ஆனாலும் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிய வகை நாட்டு மருந்துகள் மற்றும் பொருள்கள் தீயில் கருகியது.

இதுகுறித்து மேற்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆா்.வினோத் பாா்வையிட்டு உரிமையாளரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தாா். தீ விபத்து நடந்த இடம் கும்பகோணம்-தஞ்சாவூா் பிரதானசாலை என்பதால் சனிக்கிழமை காலை வரை போக்குவரத்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments