FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்ட 2 போ் கைது

பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

20 செப்டம்பர் 2026, 1:15 am IST
பகிர்:

பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள மானோஜிபட்டியில் செப். 8 ஆம் தேதி மளிகை கடைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய நிருபா மலரின் கழுத்திலிருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதன் மூலம் தங்கச் சங்கிலி பறிப்பில் மதுரை மாவட்டம், முத்துப்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் தனபாண்டி (27), திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சதீஷ் (28) ஈடுபட்டதும், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வழிப்பறி வழக்குகளில் இருவரும் தேடப்பட்டு வருவதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தனபாண்டி, சதீஷை காவல் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய மருத்துவக்கல்லூரி காவல் ஆய்வாளா் ஜெயந்தி, உதவி ஆய்வாளா் தென்னரசு உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments