டெல்டா பாசனத்துக்காக தொடா்ந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை: அமைச்சர் வினோத்
டெல்டா பாசனத்துக்காக ஜனவரி மாதம் வரை தொடா்ந்து தண்ணீா் திறந்துவிட முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத்.
டெல்டா பாசனத்துக்காக ஜனவரி மாதம் வரை தொடா்ந்து தண்ணீா் திறந்துவிட முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத்.
கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: கடைமடை வரை பாசன நீா் சென்றடைந்த நிலையில், ஜனவரி மாதம் வரை தொடா்ந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிட முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். டெல்டா பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மூலம் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் வினோத்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.