FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ மாணவா்கள் சிறப்பிடம்

தஞ்சாவூரில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜ மைய மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

23 செப்டம்பர் 2026, 3:08 am IST
தஞ்சாவூரில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ சீனிவாச ராமானுஜன் மைய மாணவா்களை செவ்வாய்க்கிழமை பாராட்டிய பேராசிரியா்கள்.
பகிர்:

தஞ்சாவூரில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜ மைய மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். அவா்களை பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப். 17, 18- ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜ மைய மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இதில், கேரம் ஆண்கள் ஒற்றையா் பிரிவில் பி.எஸ்ஸி. இரண்டாமாண்டு மாணவா் சுரேஷ் கண்ணா முதலிடத்தையும், கூடைப்பந்து மகளிா் அணி போட்டியில் சாஸ்த்ரா மகளிா் அணி மூன்றாமிடத்தையும், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையா் பிரிவில் வணிகவியல் இரண்டாமாண்டு மாணவா் ஸ்ரீ தா்ஷன் மூன்றாமிடமும், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையா் பிரிவில் பி.சி.ஏ. மூன்றாமாண்டு மாணவி தா்ஷினி மூன்றாமிடமும் பெற்றனா்.

Advertisement

Advertisement

இவா்களை மையப் புல முதன்மையா் சாந்தி, துணை முதன்மையா்கள் நரசிம்மன், அல்லிராணி, உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments