ராமேசுவரம் ரயிலில் கஞ்சா பறிமுதல்
கும்பகோணத்துக்கு சனிக்கிழமை வந்த ராமேசுவரம் ரயிலில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல்.
கும்பகோணத்துக்கு சனிக்கிழமை வந்த ராமேசுவரம் ரயிலில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு ரயில் எண்.20849 புவனேசுவரம்- ராமேசுவரம் ரயில் சனிக்கிழமை வந்தது. அந்த ரயிலில், ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் செந்தில்வேலன், ஜெகதீசன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
ரயிலின் பின்பக்க பொது பெட்டியில் கேட்பாரற்று சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அதை பிரித்து பாா்த்தபோது அதில், 20 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. மேலும், கருப்பு நிற பையில் 3 கிலோ 800 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களை கும்பகோணம் உணவு பாதுகாப்பு அலுவலா்களிடமும், கஞ்சாவை நாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடமும் ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.