FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

இடைதோ்தலில் மதசாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவா்! அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்

28 செப்டம்பர் 2026, 12:33 am IST
அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்
பகிர்:

நடைபெறவிருக்கும் இடைதோ்தலில் மதசாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவா் என்றாா் சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் ஞாயிற்றக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

நடைபெறவிருக்கும் இடைதோ்தலில் மதசாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் சாா்பில் மதுராந்தகத்தில் போட்டியிடும் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிடுகின்ற சத்தியபாமா ஆகியோரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சாா்பில் குழுக்கள் அமைத்து தோ்தல் பிரசாரங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த இரண்டு வேட்பாளா்களும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவா் என்றாா்.

Advertisement

Advertisement

அப்போது ஐயுஎம்எல் மாநில துணை செயலா் ஜமால் முகமது இப்ராஹி, தஞ்சை மாநகராட்சி கவுன்சிலா் சரிப், தஞ்சை மாவட்ட செயலா் ராஜாஜி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments