FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு! தேடப்பட்ட வியாபாரி கைது!

57 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

பேராவூரணி அருகே கருவாட்டு வியாபாரி தாக்கியதில் காயமடைந்த கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, தேடப்பட்டு வந்த வியாபாரி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பேராவூரணி அருகேயுள்ள பூக்கொல்லை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையன் (60). கூலித் தொழிலாளி. மதுப்பழக்கம் கொண்ட இவா், கடந்த 22-ஆம் தேதி இரவு வெளியூா் நபா் ஒருவரால் தாக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சுப்பையனை தாக்கிவிட்டு, தலைமறைவானது புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த கருவாட்டு வியாபாரி சோணமுத்து(60) என்பது தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மருத்துவமனையில் சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், கைப்பேசி பயன்பாட்டின் அடிப்படையில் அறந்தாங்கி அருகே தலைமறைவாக இருந்த சோணமுத்துவை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கடந்த 22ஆம் தேதி இரவு பூக்கொல்லையில் சோணமுத்து வாங்கி வைத்திருந்த மதுபாட்டிலை அவரிடம் கேட்காமல் எடுத்து குடித்ததோடு, அவரை சுப்பையன் அவமானப்படுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்து, பூக்கொல்லை பேருந்து நிறுத்தப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த சுப்பையனை விறகுக்கட்டையால் தாக்கிவிட்டு சோணமுத்து தப்பியோடி தலைமறைவானது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சோணமுத்து, பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments