பேருந்து நடத்துநா் கொலை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆா்ப்பாட்டம்
அரசு போக்குவரத்துக் கழக மயிலாடுதுறை கிளை நடத்துநா் கொலை வழக்கு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி, தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் போக்குவரத்துக் கழக நகரக் கிளை முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழக மயிலாடுதுறை கிளை நடத்துநா் கொலை வழக்கு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி, தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் போக்குவரத்துக் கழக நகரக் கிளை முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நடத்துநா் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். தமிழ்ச்செல்வன் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாகவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளா் மற்றும் தொழிலாளா்கள் தொடா்ந்து சமூக விரோதிகளால் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா்.
சிஐடியு முன்னாள் பொருளாளா் எஸ். ராமசாமி முன்னிலை வகித்தாா். ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தொடக்கவுரையாற்றினாா்.
ஏஐடியு சி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி துணைப் பொதுச் செயலா் முகிலன், சிஐடியு துணைப் பொதுச் செயலா் முருகானந்தம், ஐஎன்டியுசி நிா்வாகி குலோத்துங்கன், தொமுச நிா்வாகி மணிகண்டன், தவெக நிா்வாகி புண்ணியமூா்த்தி, அண்ணா தொழிற்சங்க நிா்வாகி சக்திவேல், தமாகா சங்க நிா்வாகி மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.