நகைப் பட்டறை பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருச்சியில் நகைப் பட்டறையின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சியில் நகைப் பட்டறையின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சி பெரிய கம்மாள வீதியைச் சோ்ந்தவா் என். ராஜேந்திரன் (57), பொற்கொல்லா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலை தனது நகைப் பட்டறைக்கு வந்தபோது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் (21 ஜோடி காதணிகள்), ரூ.51 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.