திருவானைக்காவல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவானைக்காவல் பகுதியில் புதன்கிழமை காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
திருவானைக்காவல் பகுதியில் புதன்கிழமை காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
பாரதி தெரு, கரிகாலன் தெரு, நடுக்கொண்டையம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் இப்பகுதியில் பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் சமூக ஆா்வலா்கள் வைத்த கோரிக்கையைத் தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகம் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளவா்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள நோட்டீஸ் வழங்கியது. ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனா்.
இதையடுத்து புதன்கிழமை காலை மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் தலைமையில் 35 க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
Advertisement
Advertisement
அதிகாரிகளுடன் வாக்குவாதம்: பாரதி தெரு பகுதியில் உள்ள 25 க்கும் மேற்பட்ட கடைகளின் முன் பகுதிகள், தற்காலிக நிழற்குடைகள் மற்றும் வீட்டு வாசலில் மாநகராட்சி பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தரைத் தளம் ஆகியவற்றை முற்றிலும் இடித்து அகற்றினா். அப்போது ஒரு சிலா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடரச் செய்தனா்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அகற்றம்: தற்போது திருவானைக்கா கோயிலில் நடைபெறும் ஆடி வெள்ளியில் பல பகுதிகளிலிருந்து ஏராளமானோா் தரிசனம் செய்ய வருகின்றனா். அவா்கள் கோயிலுக்கு வரும் முக்கியப் பாதையான பாரதி தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகளை 10 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றியதால் பெரும் மகிழ்ச்சியடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.