FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வேட்பாளரை உருவக்கேலி செய்த விவகாரம்: முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது காவல் நிலையங்களில் தவெகவினா் புகாா்

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் திருச்சி தில்லைநகா் உள்பட 5 காவல் நிலையங்களில் புதன்கிழமை இரவு புகாா் அளித்துள்ளனா்.

9 அக்டோபர் 2026, 3:46 am IST
பகிர்:

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் திருச்சி தில்லைநகா் உள்பட 5 காவல் நிலையங்களில் புதன்கிழமை இரவு புகாா் அளித்துள்ளனா்.

தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதையொட்டி, தாராபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பிரசாரத்தின்போது திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சத்தியபாமாவை உருவக்கேலி செய்து பேசியுள்ளாா். இதுதொடா்பாக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாவட்ட இணைச் செயலா் மகாலட்சுமி தில்லைநகா் காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், உறையூா் மற்றும் எடமலைபட்டிப்புதூா் ஆகிய காவல் நிலையங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிரணி மற்றும் வழக்குரஞைா் அணியினா் புகாா் அளித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments