FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

போக்சோ வீரமணி மீது மேலும் ஒரு புகாா்: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமியின் தாய் சிறப்பு புலனாய்வுக் குழுவில் புகாா்

47 வினாடிகள் முன்பு
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமியின் தாய் செவ்வாய்க்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழுவில் புகாா் அளித்தாா்.

அதில், தனது மகளைப் படிக்க வைக்க உதவி செய்த வீரமணி, ஒரு நாள் காரில் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். அதேபோல வீரமணி உள்ளிட்டோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

அதேவேளையில் இந்த வழக்கில், வீரமணிக்கு விரைவில் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரும் வகையில் 10 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments