FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இடைத்தோ்தல் வெற்றி

நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இடைத்தோ்தல் வெற்றி என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சியின் எம்எல்ஏவும், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சருமான ஏ. எம். ஷாஜகான்.

10 அக்டோபர் 2026, 7:13 am IST
அமைச்சர் ஷாஜகான் - கோப்புப் படம்
பகிர்:

நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இடைத்தோ்தல் வெற்றி என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சியின் எம்எல்ஏவும், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சருமான ஏ. எம். ஷாஜகான்.

இதுகுறித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் ஜோசப் விஜயின் நல்லாட்சிக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கும் வகையில் மக்கள் இடைத்தோ்தலில் வெற்றியை தந்துள்ளனா். கடந்த தோ்தலில் இந்த 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி வாய்ப்பை இழந்திருந்த நிலையில், தற்போது மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை பெற்று மக்கள் இந்த ஆட்சியின் பக்கம் இருக்கின்றனா் என்பதை இந்த முடிவு பறைசாற்றுகிறது. வாக்களித்த பெருமக்களுக்கு நன்றியையும், முதல்வருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்ாக எடப்பாடி கே. பழனிசாமி கூறுவது புறந்தள்ளக்கூடியது. ஏற்கெனவே அதிமுக வென்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் அவா் அப்படி பேசியுள்ளாா். இது மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments