FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

போசம்பட்டி அரசுப் பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு

திருச்சி அருகேயுள்ள போசம்பட்டி அரசுப் பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 4:30 am IST
திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணா்வு போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய ஹிந்துஸ்தான் பெட்டரோலிய நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளா் ஐயப்பதாஸ். ~போசம்பட்டி அரசுப் பள்ளியில் புதன்கிழமை
பகிர்:

திருச்சி அருகேயுள்ள போசம்பட்டி அரசுப் பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் கடந்த ஆக. 17 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசுப் பள்ளியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ். சற்குணன் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் மாணவா்களுக்கு ஊழல் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளியில் பிற மாணவா்கள் தவறவிட்ட உடைமைகளை மீட்டு வழங்கிய நோ்மையான மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து ஊழல் தடுப்பு தொடா்பான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்வில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன கூடுதல் பொது மேலாளா் ஐயப்பதாஸ், போசம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை கலைச்செல்வி, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments