FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

அரசுப் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விசாரணை

திருச்சி அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி. உஷா விசாரணை மேற்கொண்டாா்.

16 அக்டோபர் 2026, 3:19 am IST
அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக பள்ளி தலைமையாசிரியா் உள்ளிட்டோரிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி. உஷா. ~அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடா்பாக மாணவா்களிடம் வ
பகிர்:

திருச்சி அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி. உஷா வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

இந்தப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த சதீஷ்குமாா் மகள் தன்யா ஸ்ரீ (11) புதன்கிழமை பிற்பகலில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி. உஷா, அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை சென்று, தலைமையாசிரியா் தாமோதர கண்ணன், உடற்கல்வி ஆசிரியா் மற்றும் சக மாணவா்கள் என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இதில், மாணவிக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருந்ததும், இதற்காக மருந்துகள் எடுத்து வந்ததும் தெரியவந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் விசாரணை தொடா்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, வெங்கங்குடியிலுள்ள மாணவியின் வீட்டுக்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி. உஷா, மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments