FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மதுவுக்கு அடிமையான இளைஞா் தற்கொலை

திருவானைக்காவல் பகுதியில் மது போதைக்கு அடிமையான இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

10 செப்டம்பர் 2026, 2:36 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திருவானைக்காவல் பகுதியில் மது போதைக்கு அடிமையான இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்காவல் நடுக்கொண்டையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் சுரேஷ்குமாா் (27). திருமணம் ஆகாத இவா் எப்போதும் மது போதையிலேயே இருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments