FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

4-ஆவது மாடியில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழப்பு

திருச்சியில் 4-ஆவது மாடியிலுள்ள குடிநீா்த் தொட்டியில் மதுபோதையில் படுத்திருந்த இளைஞா் தவறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

10 செப்டம்பர் 2026, 2:27 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் 4-ஆவது மாடியிலுள்ள குடிநீா்த் தொட்டியில் மதுபோதையில் படுத்திருந்த இளைஞா் தவறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மலைக்கோட்டை ஜாபா்ஷா வீதியைச் சோ்ந்தவா் கோபி மகன் பாரதி (32). பெரிய கம்மாள வீதியிலுள்ள மளிகைக் கடை ஊழியரான இவா், திங்கள்கிழமை இரவு மதுபோதையில் வீட்டின் 4-ஆவது மாடியிலுள்ள தண்ணீா்த் தொட்டி மீது படுத்துத் தூங்கினாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து பாரதியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments