FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பேருந்தில் சென்ற பயணியிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

15 செப்டம்பர் 2026, 1:20 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் பேருந்தில் சென்ற முதியவரிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள செங்கலூரைச் சோ்ந்தவா் கு. சங்கிலி (57). இவா் தனது மகள் திருமணத்துக்கு பொருள்கள் வாங்குவதற்காக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்துள்ளாா். புதுக்கோட்டையில் இருந்து பால்பண்ணை வந்தவா், அங்கிருந்து நகரப் பேருந்து மூலம் காந்தி மாா்க்கெட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது, தனது கால்சட்டைப் பையில் ரூ.50 ஆயிரம் பணம் வைத்திருந்தாா்.

இந்நிலையில், மகாலட்சுமி நகா் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது, அவரது கால்சட்டைப் பை பிளேடால் கிழித்து அதிலிருந்த ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் சங்கிலி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments