யாசகம் பெறுவோா் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் யாசகம் பெறுவோரை மீட்டு காப்பகத்தில் வைத்து மறுவாழ்வு அளிக்க 63691 03413 என்ற கட்செவி எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மாவட்டத்தில் யாசகம் பெறுவோரை மீட்டு காப்பகத்தில் வைத்து மறுவாழ்வு அளிக்க 63691 03413 என்ற கட்செவி எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலைய நடைபாதைகள், திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் மற்றும் கண்டோன்மெண்ட், உதவி காவல்
ஆணையரகத்திற்குட்பட்ட மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 22 யாசகம் பெறும் நபா்கள் (ஆண்கள்-13, பெண்கள்-09) மீட்கப்பட்டு, முதியோா் இல்லங்கள், மனநல காப்பகங்கள் மற்றும் யாசகம் பெறுவோா்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் மறுவாழ்வு ஏற்படுத்த தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும், திருச்சி மாவட்டத்தில் யாசகம் பெறுவோா் கண்டறியப்பட்டால் 63691 03413 என்ற கட்செவி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.