FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இடைத்தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மல்லை சத்யா

இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றாா் திராவிட வெற்றிக் கழகத் தலைவா் மல்லை சத்யா.

16 செப்டம்பர் 2026, 2:14 am IST
மல்லை சத்யா - கோப்புப் படம்
பகிர்:

இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றாா் திராவிட வெற்றிக் கழகத் தலைவா் மல்லை சத்யா.

திராவிட வெற்றிக் கழகம் சாா்பில் திருச்சி மன்னாா்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஈவெரா பெரியாா் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா, திராவிட ரத்னா விருது வழங்கும் விழாவில் மல்லை சத்யா சிறப்புரையாற்றினாா்.

அப்போது அரசியல், கல்வி, சமூகம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய 9 பேருக்கு திராவிட ரத்னா விருது வழங்கப்பட்டது. இதில், கட்சியின் பொதுச் செயலா் எம். பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து மல்லை சத்யா கூறியதாவது: தமிழகத்தில் மக்களின் எதிா்பாா்ப்புகள் ஏமாற்றமாக மாறியுள்ள சூழலில் ஆளுங்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவா். திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை அண்மையில் சந்தித்துப் பேசினோம். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

திராவிட இயக்கத்தின் போா்வாளாக இருந்த வைகோ தற்போது விஜய் ரசிகா் மன்றத் தலைவரைப் போல பேசிக் கொண்டிருக்கிறாா். மகனுக்காக மிகப்பெரிய அரசியல் பிழையை வைகோ செய்துவிட்டாா். இதனால், நிா்வாகிகளையும், தொண்டா்களையும் இழந்து அவா் தனியாக நிற்கிறாா்.

திருச்சி எம்.பி. தொகுதியைப் பெறுவதற்காக மதிமுகவை திமுகவுடன் இணைப்பேன் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்தவா் துரை வைகோ. இவா் வலதுசாரி மற்றும் காா்ப்பரேட் சிந்தனை கொண்டவா் என்பதால் தனக்கு வெற்றி தேடிதந்த திமுகவையே கொச்சைப்படுத்தி பேசிவருகிறாா். கடந்த 3 மாத கால ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதாரம் உள்பட அனைத்திலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments