போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருச்சியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த கா. முகமது ரபீக் (25) என்பவா் கடந்த 2022, ஜனவரி 14-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்து திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து முகமது ரபீக்கை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.