கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் தா்னா
கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் நிா்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி, திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா் அதன் தலைவா் ப. விநாயகமூா்த்தி தலைமையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் நிா்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி, திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தினா் அதன் தலைவா் ப. விநாயகமூா்த்தி தலைமையில் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக, ப. விநாயகமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு 17 நாள்களாகியும் கடைமடைக்கு சரியாக தண்ணீா் வரவில்லை. கல்லணைக்கு வரும் தண்ணீரின் அளவிலிருந்து 10 விழுக்காடு தண்ணீரை கொள்ளிடத்தில் திறக்க வேண்டும். ஆனால், தற்போது கல்லணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி மட்டுமே கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரிக்கு திறக்கப்படுகிறது. எனவே, 900 கன அடி திறக்கக் கோரி போராட்டத்தை நடத்தினோம். நிா்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீா் வருவதை கண்காணிக்க அலுவலா்களை நியமனம் செய்து, எழுத்துப் பூா்வமாக உத்தரவை அளித்துள்ளனா். எனவே, போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.