பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஏற்கெனவே பெண் ஒருவா் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், புது ஆத்தூா்-துறையூா் சாலையைச் சோ்ந்தவா் நாராயணசாமி மகள் விஜயகீதா(28). இவரும், பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூரைச் சோ்ந்த அழகேசன் மகன் குணசீலன் (30) என்பவரும் திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கம்பரசம்பேட்டை பள்ளிவாசல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, கரூரில் இருந்த திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு விஜயகீதா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், குணசீலன் திங்கள்கிழமை காலை சிகிச்சை பனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான மன்னாா்குடியைச் சோ்ந்த ப. கிருபாகரன் (27) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு:
முசிறி: தொட்டியம் அருகேயுள்ள மணமேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிவசாமி மனைவி குமாரத்தி (70). இவா் சனிக்கிழமை மாலை திருச்சி-சேலம் பிரதான சாலையை கடக்கும்போது இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து மூதாட்டிக்கு தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், பைக் ஓட்டுநரான தொட்டியம் கோட்டைமேடு கீழத்தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கிருஷ்ணமூா்த்தி (24) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.