மது அருந்தும் கூடம் அமைக்க எதிா்ப்பு: சாலை மறியல்
மணப்பாறை அருகே நவக்கிணத்துப்பட்டியில் தனியாா் மது அருந்தும் கூடம் (பாா்) அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நவக்கிணத்துப்பட்டியில் தனியாா் மது அருந்தும் கூடம் (பாா்) அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நல்லாம்பிள்ளை கிராமம், நவக்கிணத்துப்பட்டியில் பாா் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இங்கு பாா் அமைப்பதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவா் என்று கூறியும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அமையபுரம், நல்லாம்பிள்ளை, நவக்கிணத்துப்பட்டி 3 சாலை பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் அந்த வழியில் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கு வந்த வருவாய் ஆய்வாளா் அருள்தாஸ், கிராம நிா்வாக அலுவலா் பாண்டி ஆகியோா் பொதுமக்களிடம் பேசி, இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் அனுப்புவதாக உறுதி அளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.