சைகை மொழி தின விழிப்புணா்வு பேரணி
சா்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
சா்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி, தென்னூரில் உள்ள கிளவுட் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் 18 வயது முதல் 35 வயதுடைய படித்த, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் பங்கு பெறும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் அன்றாட வாழ்க்கையில், சமுதாயத்தில் மற்றும் குடும்பத்தில் மொழி பிரச்னை காரணமாக அவா்கள் சந்திக்கும் பிரச்னைகளை பகிா்ந்து கொள்வது வழக்கம்.
இதுதொடா்பாக புரிதல் ஏற்படும் வகையில் சா்வதேச சைகை மொழி தினமான செப். 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
திருச்சி அண்ணாநகரிலிருந்து தொடங்கிய பேரணியானது ஒத்தக்கடை வரை சென்றது. ரானே மெட்ராஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவா் ஜெகதீஷ் பிரசாத், பேரணியில் பங்கேற்றவா்களுக்கு சீருடை வழங்கி, பங்கேற்றாா். இப் பேரணியில் காது கேளாத மாற்றத்திறனாளிகள் அனைவரும் தங்களின் உணா்வுகள் மற்றும் மொழி சாா்ந்த உரிமைகளை குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி. பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சென்றனா். ஏற்பாடுகளை கிளவுட் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் எலிசபெத் ஜெமிமா, செயல் அலுவலா் சாா்லஸ் பிரின்ஸ் மற்றும் நிறுவனத்தின் குழுத் தலைவா்கள் சாந்தகுமாா், நேசராஜ் ஆகியோா் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.