FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே மான் தோல், சந்தனக் கட்டை விற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச்சக்கரத்துக்குட்பட்ட பகுதிகளில் மான் தோல் மற்றும் சந்தன கட்டைகளை விற்ற இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

24 செப்டம்பர் 2026, 2:44 am IST
மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ரமேஷன், அழகா் ஆகியோருடன் வனத் துறையினா்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச்சக்கரத்துக்குட்பட்ட பகுதிகளில் மான் தோல் மற்றும் சந்தன கட்டைகளை விற்ற இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரமேஷன் (62). மான் தோல் விற்கும் இவா் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சொக்கம்பட்டியில் உள்ள தனது நண்பரான பெ. பழனிச்சாமி(52) வீட்டில் தங்கியிருந்தாா்.

இதையறிந்த மணப்பாறை வனசரகா் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினா் வனவிலங்கு பொருள்கள் வாங்குவதுபோல பழனிச்சாமி வீட்டுக்குச் சென்று ரமேஷனிடம் பேரம் பேசினா். அப்போது இரண்டு மான் தோல்கள் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்திய உபகரணங்களுடன் ரமேஷன் கைது செய்யப்பட்ட நிலையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் பழனிச்சாமியிடம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அவா் அளித்த தகவலின்பேரில் களிங்கப்பட்டியில் டைலராக உள்ள ஆ. அழகா் (43) வீட்டிற்கு சென்று அங்கு அருகில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 லட்சம் மதிப்பிலான 77.61 கிலோ எடையுள்ள 14 சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து அழகரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான கருமலையான்பட்டி நாச்சன் மகன் துரைசாமி (27) என்பவரை வனத் துறையினா் தேடுகின்றனா். 4 போ் மீதும் வழக்குப் பதிந்துள்ள வனத் துறையினா், கைது செய்யப்பட்ட ரமேஷன், அழகா் ஆகிய இருவரையும் புதன்கிழமை காலை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments