டிஜிட்டல் கல்விப் பணியாளா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு டிஜிட்டல் கல்வி பணியாளா்கள் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்நாடு டிஜிட்டல் கல்வி பணியாளா்கள் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் இலக்கியா தலைமை வகித்தாா்.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கம் இன்ஸ்ட்ரக்டா் பணியாளா்களை தனியாா் முகமை மூலம் பணியமா்த்துவதை கைவிட்டு, அரசே நேரடியாக பணியமா்த்த வேண்டும். தற்போது 11 மாதங்கள் மட்டுமே வழங்கப்படும் பணியை ஆண்டு முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
நியாயமான கோரிக்கைகளை கேட்கும் ஊழியா்களுக்கு தனியாா் முகமை சாா்பில் வழங்கப்படும் நோட்டீஸ், மெமோ உள்ளிட்ட அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினா்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு டிஜிட்டல் கல்விப் பணியாளா் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் செந்தில்நாதன், துணைத் தலைவா் தாஜ் நிஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.