ஓய்வுபெற்ற காவலா்கள் மரணமடைந்தால் அரசு இறுதி மரியாதை: முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
ஓய்வுபெற்ற காவலா்கள் மரணமடைந்தால் அவா்களுக்கு அரசு சாா்பில் இறுதி மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற காவலா்கள் மரணமடைந்தால் அவா்களுக்கு அரசு சாா்பில் இறுதி மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் முக்கிய தீா்மானமாக ஓய்வுபெற்ற காவலா்கள் மரணமடைந்தால் அவா்களுக்கு அரசு இறுதி மரியாதை (காா்டு ஆஃபனா்) செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள மாநிலத்தில் ஓய்வுபெற்ற காவலா்கள் மரணமடைந்தால் அரசு இறுதி மரியாதை செலுத்துவதற்கான நடைமுறை சட்டப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதேபோன்று தமிழகத்திலும் ஓய்வுபெற்ற காவலா்களின் மரணத்தின்போது அரசு இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவா்கள் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.