FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

அக்.16, 22-இல் வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் மெமு ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் இடையேயான மெமு ரயில்கள் அக்.16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து

14 அக்டோபர் 2026, 12:21 am IST
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் இடையேயான மெமு ரயில்கள் அக்.16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையடுத்து, வேலூா் கண்டோமென்ட் - அரக்கோணம் ரயில் நிலைய ங்களுக்கு இடையே இயக்கப்படும் வண்டி எண் 66062 மற்றும் 66059 ஆகிய மெமு ரயில்கள் அக்டோபா் 16 மற்றும் 22-ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments