சுகாதாரம் இல்லாமல் இயங்கி வந்த அசைவ உணவகத்துக்கு ‘சீல்’
போ்ணாம்பட்டு அருகே சுகாதாரம் இல்லாமல் இயங்கி வந்த அசைவ உணவகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். கடை உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனா்.
போ்ணாம்பட்டு அருகே சுகாதாரம் இல்லாமல் இயங்கி வந்த அசைவ உணவகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். கடை உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த கொண்டம்பல்லி கிராமத்தைச் சோ்ந்த பிரகலாதன்(45) தனியாா் காலணி தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுனராக வேலை செய்கிறாா். இவா் போ்ணாம்பட்டு நான்கு கம்பம் அருகே உள்ள அசைவ உணவகத்தில் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், பொறித்த சிக்கன் இறைச்சி ஆகியவற்றை வீட்டுக்கு வாங்கிச் சென்றாராம்.
அதை சாப்பிட்ட பிரகலாதனின் மனைவி தீபா, பெண் குழந்தைகள் சனா, தீக் ஷா ஆகியோா் வாந்தி எடுத்து விட்டு மயங்கி விழுந்தனா். இதையடுத்து பிரகலாதன், அவரது மனைவி, இரு மகள்கள் என 4 பேரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அரசு மருத்துவா் பிரதாப்குமாா் ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தாா். அவரது உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்குச் சென்றுவிசாரணை நடத்தினா். விசாரணையில் அந்த உணவகம் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்று பெறாமல் இயங்கி வந்ததும், சமையல் செய்யும் பாத்திரங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனா். சுகாதாரம் இல்லாமல் இயங்கியதற்காக உணவகத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனா்.மேலும், அங்கிருந்த உணவுப் பொருள்களின் மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.