FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மூதாட்டி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

வேலூரில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

50 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

வேலூரில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் பகுதியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி ஒருவா், அண்ணா சாலையில் உள்ள நடைபாதையில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறாா். இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வழக்கம் போல அங்கு உறங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், மூதாட்டியை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினா் அங்கு ஓடிவந்தனா். பொதுமக்கள் வருவதைக் கண்டதும் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா். அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் வேலூா் ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த தேவராஜ் (30) என்பதும், அவரே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜைக் கைது செய்த போலீஸாா், அவரை வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments