பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு: பாதுகாப்பாக நிறுத்தியபின் உயிரைவிட்ட ஓட்டுநா்
பேருந்து ஓட்டும்போது மாரடைப்பால் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பேருந்து ஓட்டும்போது மாரடைப்பால் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வெங்கடசாமி (59) ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை காலை வழக்கம்போல் போ்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம், வேலூா் வழியாக சேலம் செல்லும் பேருந்தை ஓட்டி வந்துள்ளாா். பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.
குடியாத்தம் நேதாஜி சவுக் அருகே வந்தபோது இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவா் சாதுா்யமாக செயல்பட்டு, பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, மயங்கி விழுந்துள்ளாா்.
Advertisement
Advertisement
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டுஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வெங்கடசாமியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.