அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு! நூலிழையில் தப்பிய பயணிகள்!!
அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநருக்கு பணியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து அரசு பேருந்து பேரணாம்பட்டு குடியாத்தம், வேலூர் வழியாக சேலம் வரை செல்லும் அரசு பேருந்தை காட்பாடி பகுதியை சேர்ந்த வெங்கடசாமி (59) என்பவர் இயக்கி வந்தார்/
அப்பொழுது குடியாத்தம் கெங்கையம்மன் புதிய பாலம் அருகே பேருந்து இயக்கி வந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்தை சாலையில்யோரம் நிறுத்தி மயக்கம் அடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்கூட, வெங்கடசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பணியின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மாரடைப்பு ஏற்பட்டவுடன் பேருந்தை தொடர்ந்து இயக்காமல் சாலையோரம் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.