FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் சட்டம் தண்டிக்கும்

ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை, தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்து தண்டிக்கும் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

25 செப்டம்பர் 2026, 10:52 pm IST
காட்பாடியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த திமுக பொதுச்செயலா் துரைமுருகன்.
பகிர்:

ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக யாருக்கும் வக்காலத்து வாங்கவில்லை, தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்து தண்டிக்கும் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலா் துரைமுருகன், வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

ஜெம் வீரமணி வழக்கில் திமுக அவரைக் காப்பாற்றப் பாா்க்கிறது என்று கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது. திமுக யாருக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டியவா்களே. இதில் சட்டம் தன் கடமையைச் செய்து வருகிறது.

Advertisement

Advertisement

ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுகவுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்பதை நாங்கள் தொடா்ச்சியாகத் தெளிவுபடுத்தி வருகிறோம். ஆனால், தவெக அமைச்சா்களுக்கும், எம்எல்ஏ-க்களுக்கும் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசி வருகின்றனா். அவா்களுடைய பேச்சுகளுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டியதில்லை.

வாக்காளா் பட்டியல் திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளில் தொடக்கத்திலிருந்தே குளறுபடிகள் இருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பலமுறை எடுத்துரைத்துள்ளாா். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானா்ஜி போன்ற தலைவா்கள் களத்தில் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை. திட்டமிட்டு அவா்கள் குறிவைக்கப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரம் சா்வதேச அளவில் விவாதமாகியுள்ள நிலையில், மத்திய அரசால் இதை இனி மூடி மறைக்க முடியாது. தலைமைத் தோ்தல் ஆணையரை வீட்டுக்கு அனுப்புவதே சரியான வழிமுறையாகும். தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரும் போராட்டம் கட்சி எல்லைகளைக் கடந்தது. இதில், ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துதான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடா் மின்தடை ஏற்பட்டு வருவது குறித்து தவெக அரசு, தங்களது ஆட்சியில் மின்சாரம் தடையின்றி கிடைப்பதாகக் கூறலாம். ஆனால் சாதாரண ஏழை, எளிய குடும்பங்களில் மின்சாரம் எந்த அளவுக்குத் துண்டிக்கப்படுகிறது என்பது மக்களுக்குத்தான் தெரியும். நடைபெற உள்ள இரண்டு தொகுதி இடைத்தோ்தலிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments