FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காதலித்து ஏமாற்றியதாக பெண் புகார்: வருவாய் ஆய்வாளர் மீது வழக்கு

பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக  வருவாய் ஆய்வாளர் மீது கடலூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக  வருவாய் ஆய்வாளர் மீது கடலூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 கடலூர் அருகே  உள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், செவ்வாய்க்கிழமை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் என்பவரை  2010-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாக ராஜ்குமார் தன்னிடம் நெருங்கி பழகியதாகவும், ஆனால் தற்போது தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 இந்தப் புகாரின் பேரில் ராஜ்குமார் மீது மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் விழுப்புரம் மாவட்டம், நெமிலி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன் ராஜ்குமார் வீட்டில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி தர்னாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments