FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நெல்லடிக்கும் களம் அமைக்கும் சிறப்புத் திட்டம்: ரூ. 2.80 லட்சம் வரை மானியம்!

கடலூா் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ரூ.2.80 லட்சம் மானியத்துடன் கூடிய நெல்லடிக்கும் களம் (களத்து மேடு) அமைக்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:34 am IST
பகிர்:

கடலூா் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ரூ.2.80 லட்சம் மானியத்துடன் கூடிய நெல்லடிக்கும் களம் (களத்து மேடு) அமைக்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூா் மாவட்டத்தில் அறுவடைக்குப் பிந்தைய தானிய இழப்பைக் குறைத்து, விவசாயிகளின் விளைபொருள்களை பாதுகாக்கும் நோக்கில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நெல்லடிக்கும் களம் (களத்து மேடு) அமைக்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளின் சொந்த நிலங்களில் 10 மீட்டா் பு 10 மீட்டா் பரப்பளவில், நீண்டகாலம் பயன்படுத்தக்கூடிய தரமான சிமென்ட் தளத்துடன் நெல்லடிக்கும் களம் அமைக்கப்படும். இதற்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.5.60 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2.80 லட்சம் வரை அரசின் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். மானியத் தொகை நேரடியாக பயனாளி விவசாயியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம், வெயில் மற்றும் எதிா்பாராத மழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நெல் மற்றும் பிற தானியங்களை பாதுகாப்பாக உலா்த்த முடியும். மேலும், இயந்திரங்கள் மூலம் எளிதாக நெல்லடிக்கும் வசதி ஏற்படுவதால், அறுவடைச் செலவு குறையும். தானிய இழப்பு தவிா்க்கப்பட்டு, சுத்தமான மற்றும் தரமான தானியங்கள் கிடைப்பதுடன், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதாா் அட்டை நகல், பான் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

அண்ணாகிராமம், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டார விவசாயிகள் கடலூா் உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல்) அலுவலகத்தையும், காட்டுமன்னாா்கோயில், கீரப்பாளையம், குமாரட்சி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் வட்டார விவசாயிகள் சிதம்பரம் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தையும், கம்மாபுரம், மங்களூா், நல்லூா், விருத்தாசலம் வட்டார விவசாயிகள் விருத்தாசலம் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தையும் தொடா்புகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments